(த.தவக்குமார்)
வாழைச்சேனை கடதாசி ஆலையினை விரைவில் இயக்குவதற்கான அனுமதியினை நேற்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் அமைச்சர் றிஸாட் பதியுததீன் வழங்கியுள்ளதாக பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த தொழிச்சாலையினை இயக்குவதற்கான அனைத்து ஆவணங்களும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதியும் கிடைப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.எதிர்வரும் காலங்களில் இத்தொழிச்சாலையில் அதிகமான இளைஞர்,யுவதிகளுக்கு பல தரப்பட்ட வேலைவாய்ப்புக்களும் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.




Share To:

Post A Comment:

0 comments so far,add yours