(க. விஜயரெத்தினம்)
போக்குவரத்து செய்ய முடியாமல் காணப்பட்ட மணல் வீதிகள் இரண்டு பிரதேச சபை உறுப்பினரின் முயற்சியால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள்,மாணவர்கள்,அரசாங்க உத்தியோகஸ்தர்கள் போன்றவர்கள் போக்குவரத்து செய்ய முடியாமல் மணல்வீதியாகவும்,வெள்ளநீர் தேங்கி இருக்கின்ற இரண்டு வீதிகளை தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் களுதாவளை பிரதேச சபை உறுப்பினர் த.சுதாகரன் பிரதேச சபையின் தவிசாளர், செயலாளரின் கவனத்துக்கு முறையாக தெரியப்படுத்தியடுத்து பொதுமக்கள் போக்குவரத்து செய்வதற்கு இரண்டு வீதிகளுக்கும் கிறவல் போட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு கிராமத்தில் உள்ள கல்முந்தல் வீதி,வாசிகசாலை கிழக்கு வீதி இவ்வாறு புனரமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு புனரமைப்பு செய்வதற்கு கவனமெடுத்த பிரதேச சபை உறுப்பினர்,தவிசாளருக்கு பொதுமக்கள் நன்றியையும்,பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றார்கள்.


Post A Comment:
0 comments so far,add yours