ச.குமணன்
அம்பாறை.
சிலோன் மீடியா போரம் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தகவல் உரிமைச் சட்டம் செயலமர்வும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் சனிக்கிழமை (05) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ்இ முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சமூக ஊடக செயற்பட்டாளர்கள் வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 75 பேர் கலந்து கொண்டனர்
இந் நிகழ்வில் மாற்றுக் கொள்கைகான சிரேஸ்ட ஆய்வாளர் லயனல் குருகே கலந்து கொண்டு தகவல் உரிமை சட்டம் தொடர்பாக விளக்கமளித்தார்.செயலமர்வில் பங்குபற்றியவர்களுக்கு நிகழ்வின் இறுதியில் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீஸன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சாய்ந்தமருது பிரதேச செயலக கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர்,சிலோன் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நுருல் ஹூதா உமர், பிரதித் தலைவர்களான எஸ்.அஷ்ரஃப்கான், ரீ.கே.றஹ்மதுல்லாஹ், உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Post A Comment:
0 comments so far,add yours