ச.குமணன்
அம்பாறை.
 
 


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின்  கல்முனை காரியாலயம் சனிக்கிழமை  (05) காலை 11 மணியளவில் கல்முனை தரவைப்பிள்ளையார் கோயில் அருகாமையில் திறந்துவைக்கப்பட்டது.
 
 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை தொகுதி பிரசார முக்கியஸ்தரான அஹமட்  புர்க்கானின் தலைமையில் திறந்துவைக்கப்பட்ட இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் பிரிவின் பொறுப்பாளர்  மில்பர் கபூர் உள்ளிட்ட  முக்கியஸ்தர்கள்இ ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 
இந்த நிகழ்வின் போது தலைமை உரையாற்றிய அஹமட் புர்கான்
 
 முஸ்லிம் தலைவர்களான அமைச்சர் ரவூப் ஹக்கீமாக இருந்தாலும் சரி அமைச்சர் ரிஷாட் பதியுதீனாக இருந்தாலும் சரி இவர்கள் பொதுஜன பெரமுன கட்சியை பற்றி பிழையான விமர்சனங்களை மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த முஸ்லிம் தலைமைகள் எந்தளவு பிழையானவர்கள் என்பதை முஸ்லிம் மக்கள் ஏன் இன்னும் உணரவில்லை . கடந்த 2010ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது ஆதரவை சரத்பொன்சேகாவிற்கு தெரிவித்துவிட்டு ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச தெரிவுசெய்யப்பட்ட பின்னர் அமைச்சுப்பதவிகளை பிச்சைக்கேட்டு சென்றவர்கள் தான் இந்த  முஸ்லீம்  கட்சியினர். எனவே முஸ்லிம் மக்கள்  தொடர்ந்தும் இவர்களை நம்பி இவர்களது சொற்களுக்கு செவிசாய்த்து மீண்டும் மீண்டும் வரலாற்று தவறை  செய்துவிடக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours