(க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டில் வியாழக்கிழமை(10)மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொறுப்பதிகாரி பீ.பீ.ஐ.சரச்சந்திர தெரிவித்தார்.
மட்டக்களப்பு-கல்முனை நெடுஞ்சாலை பிரதான வீதியில் மாங்காடு சமுர்த்தி வங்கிக்கு முன்பாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வேகமாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும்,வலதுகைப்பக்கம் திரும்பிக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் வந்தவரும் முச்சக்கர வண்டி சாரதியும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடாபான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப்பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
காயமடைந்தவர்கள் செட்டிபாளையம் மற்றும் மாங்காடு பகுதிகளை சேர்ந்த குணராசா-பஸ்மிதன்(வயது-17),புஸ் பராசா-தனுகரன்(வயது-24)என தெரிவிக்கப்படுகின்றது.


Post A Comment:
0 comments so far,add yours