(எம்.ஏ.றமீஸ்)
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சியினர் மத்தியில்; இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல் அட்டாளைச்சேனை றகுமானியாபாத் பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கிலிருந்து முஸ்லிம்களை அப்புறப்படுத்தியும், பள்ளிவாசல்களிலும் பொது இடங்களிலும் கொன்று குவித்து பல்வேறு இன்னல்களை புரிந்து வந்ததோடு சர்வதேசத்திற்கே சவாலாக இருந்து வந்த விடுதலைப் புலிகளை பூண்டோடு அழித்து நாட்டில் நிலையான சமாதானத்தினை தோற்றுவித்து பாரிய அபிவிருத்திகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் மேற்கொண்டு வரலாறு படைத்தார்.
அதே வழியில் நின்று செயற்படுவதற்கான சிறந்த ஜனாதிபதி வேட்பாளரை எமது பொதுஜன பெரமுன கட்சி களத்தில் இறக்கியிருக்கின்றது. அவருக்கு நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் இணைந்து வாக்களிப்பதே எமது எதிர்கால நல்வாழ்வுக்கான அத்திவாரமாக அமையும் என நான் எண்ணுகின்றேன்.
இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் ஆட்சி புரிந்த கடந்த நான்கரை ஆண்டுகளில் சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எவ்வாறான நன்மைகள் கிட்டியுள்ளது என்பதை நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக முஸ்லிம் தலைமைகள் இந்நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு கடந்த நான்கரை வருடங்கள் பெற்றுக் கொடுத்தது என்ன என்பதை நான் பகிரங்கமாக கேட்க விரும்புகின்றேன்.
வட கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறுபான்மைச் சமூகத்தினர் கடந்த 2005 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் மிகக் குறைந்தளவு வாக்குகளையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கினார்கள். இருந்த போதிலும் அவர் அமோக வெற்றி பெற்றார். அவ்வாறு வெற்றி பெற்றவர் சிறுபான்மைச் சமூகத்தினரை வெறுத்து ஒதுக்கவில்லை. நாட்டில் உள்ள அனைவருக்கும் பாரிய அபிவிருத்திப் புரட்சியொன்னை ஏற்படுத்திக் காட்டினார்.
இந்த நல்லாட்சிக்காலத்தில் நாம் வழங்கியதுபோல் தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றதா? எமது ஆட்சியில் பாதைகள் புனரமைக்கப்பட்டது போல் இந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது எமது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டதுபோல் பாரிய அபிவிருத்திதான் இடம்பெற்றிருக்கின்றதா என்பதை இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் நெஞ்சில் கைவைத்து கேட்டுப் பாருங்கள் அதன் பின்னர் உங்களது வாக்குகளை யாருக்கு அளிப்பது என சிந்தித்து வாக்களியுங்கள்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது கோத்தாபாய ராஜபக்ஷ அமோக வெற்றி பெருவது நிச்சயம். சிறுபான்மைச் சமூகத்தினர் எம்மை முழுமையாக ஆதரிக்க வேண்டும். அவ்வாறு ஆதரிக்காமல் போனாலும் நாம் வெற்றி பெற்றதன் பின்னர் எம்மோடு இணைந்து வெற்றியின் பங்காளிகளாகி தங்களுக்கான அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துத் தரக்கூடிய ஓர் உன்னதமான தலைவரான கோத்தாபாய ராஜபக்ஷவோடு ஓரணி திரள வேண்டும் என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours