COVID 19 வைரஸ் பிளாஸ்டிக் அல்லது துருப்பிடிக்காத உலோகத்தில் மூன்று நாட்கள் செயலுருவில் இருக்கும் என ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
செப்பு அடுக்குகளில் நான்கு மணித்தியாலங்களும் காட்போர்ட் அடுக்குகளில் 24 மணித்தியாலங்களும் இந்த வைரஸ் நீடிக்க முடியும் என New England மருத்துவ சஞ்சியை தகவல் வெளியிட்டுள்ளது.
இது சிறிய காற்று துகள்கள் அல்லது வாயு துள்களில் 3 மணி நேரம் செயலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சுத்திகரிக்கப்படாத உலோகம், கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் ஆகியவற்றில் COVID 19 வைரஸ் ஒன்பது நாட்கள் இருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் முன்பு கூறியிருந்தனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிக்கும் பணிகள் இலையுதிர் காலத்தில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் Ursula von der Leyen கூறியுள்ளார்.
அந்த தடுப்பூசியை தயாரிப்பதற்காக ஜேர்மன் ஆய்வு நிறுவனத்திற்கு 80 மில்லியன் யூரோவை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours