துதி
இன்றைய தினமும் (12) கொரோணா நோயர்கள் சிலரைப் பரிசோதனை நிமித்தம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வர இருப்பதாகப் பரவிய செய்தியை அடுத்து புளியந்தீவுப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் வைத்தியாசலைக்கு முன்னாள் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.


புணானை பல்கலைக்கழகத்தில் இருக்கும் சிலரை பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியாசலைக்கு அழைத்து வரப்பட இருப்பதாக மக்கள் மத்தியில் பரவலாகச் செய்திகள் பரவியமை காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டு இவ் எதிர்ப்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் மக்கள் வீதியில் நிறைந்திருந்து தங்கள் எதிர்ப்பினை மேற்கொண்டனர். பின்னர் மேற்படி செயற்பாடு மாற்றம் செய்யப்பட்டமை அறிந்து மக்கள் கலைந்து சென்றனர்.

அவ்விடம் பொலிஸ், பாதுகாப்புப் பிரிவினர் குவிக்கப்பட்டு பாரிய ஆர்ப்பாட்டப் பிரதேசமாக அப்பகுதி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours