துதி
நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மாவடிவேம்பு பிரதேசத்தில் அன்றாடத் தொழில் புரியும் குடும்பங்களுக்கான உணவுப் பொருட்கள் வழங்கும் செயற்திட்டம் மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் நேற்றைய தினம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முதற்கட்டமாக மாவடிவேம்பு பிரதேசம் தெரிவு செய்யப்பட்டு மேற்படி செயற்திடடம் மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் நிலைமையினைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் காலங்களில்  இது போன்ற செயற்திட்டங்களை மேலும் நடைமுறைப்படுத்தவுள்ளதாக இதன் போது அவர் தெரிவித்தார். நாடே முடங்கியுள்ள நிலையில் அன்றாடம் தொழில் செய்து வாழ்வாதாரத்தை மேற்கொள்ளும் குடும்பங்களின் நிலை பற்றி சிந்தித்தே நாம் இச்செயற்பாட்டினை முதற்கட்டமாக ஆரம்பித்துள்ளோம். இதனைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கும் உத்தேசித்துள்ளோம். இதே போல் அனைவரும் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இச் செயற்திட்டத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினரும் அனுமதி மற்றும் பூரண ஒத்துழைப்பு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours