(-க.விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரேனா தொற்று பிரச்சினை உருவானது முதல் ஜீ.கே. அறக்கட்டளையினால் நிவாரண உதவிகள், இலவச கையுறை, முகக்கவசம் வழங்கல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் முன்னாள் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினருமான கே.கருணாகரம் தெரிவித்தார்.
அதே நேரத்தில் தொடரச்சியாக இலவச அமரர் ஊர்தி சேவை நடைபெற்று வருகின்றது. எமது மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த வறிய மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட ஜீ.கே. அறக்கட்டளையின் அமரர் ஊர்தி சேவையின் ஊடாக தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளும் வழங்கப்படுகின்றன.
ஜீ.கே. அறக்கட்டளையினால் கடந்த 4 வருடங்களாக இலவச அமர்ர் ஊர்தி சேவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஜீ.கே. அறக்கட்டளையினால் இலஙகையில் கொரோனா தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு முதல் தடவையாக தளர்த்தப்பட்ட வேளை மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி, செங்கலடி, வாழைச்சேனை போன்ற மக்கள் கூடும் இடங்களில் கையுறை, முகமூடி, கொரொனா தொற்று விழிப்புணர்பு துண்டுப்பிரசுரம் போன்றவை வழங்ககப்பட்டது. அதனையடுத்து இச் செயற்பாடு தொடரப்பட்டு வருகிறது.
தொடர்ச்சியாக கொரொனா தொற்று விழிப்புணர்வுச் செயற்பாடுகள் துண்டுப்பிரசுரம் விநியோகம் போன்றவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.






Post A Comment:
0 comments so far,add yours