தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணை இன்றைய தினம் இடம்பெற இருந்தது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக நீதிபதியின் ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணையை மேற்கொள் ஏற்பாடுகளை செய்தார். இதன் பிரகாரம் இன்று வியாழக்கிழமை (03) கானொளி அழைப்பின் ஊடாக மட்டக்களப்பு குற்றவியல் சிவில் மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் விசாரணையை எடுத்துக் கொள்ளப்பட்டு எதிர்வரும் மே மாதம் 11 ம் திகதிவரை வழக்கை ஒத்திவைத்தார்.
Post A Comment:
0 comments so far,add yours