(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை பிராந்திய சுகாதார
சேவைகள் பணிமனையினால் கோவிட் 19 தொற்று நோய் கட்டுப்படுத்தும் முகமாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைய தொற்றா நோய்களுக்கான கிளினிக் நோயளிகளின் மருந்துகளை அவர்களின் வீட்டிக்கே கொண்டு செல்லும்முகமாக பொதுமக்களுக்கு
தொலைபேசி இலங்கங்கள் அறிமுகப்படுத்தும் மற்றும் வைத்தியசாலைகளுக்கு தொலைபேசிகள் வழங்கும் நிகழ்வுஇன்று (02)கல்முனை பிராந்தியசுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் ஜி .சுகுணன் தலைமையில் பிராந்திய பணிமனையில் இடம்பெற்றது .

இதன் போது இது தொடர்பாக கல்முனை பிராந்திய
சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் ஜி .சுகுணன் கருத்து தெரிவிக்கையில்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் சுகாதார சேவையினை முன்னெடுக்க இன்று தொலைபேசியுடன் 35 தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது.

பொத்துவில் ,திருக்கோவில் நிந்தவூர், சம்மாந்துறை வைத்தியசாலை உட்பட சுகாதார பணிமனை சேவை பகுதிக்குட்பட்டபிராந்திய15வைத்தியசாலைகளுக்கும், 13 சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கு இவ் தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ளோம்.


இவ் தொலைபேசி வழங்கப்பட்டதன் நோக்கம்
நாட்பட்ட நோய்க்கான அல்லது தொற்றா நோய்க்கான மாதாந்தம்
வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சை பெறுகின்றபொதுமக்களின் வசதியை ஏற்படுத்தும் முகமாக அவர்களின் வீடுகளுக்கு மருந்துகளை கொண்டு செல்லுவது நோக்கமாகும்.

நாங்கள் ஏற்கனவே இந்த கிளினிக் நோயாளர்களின் நலன் கருதி பல விதமான உத்திகளை கையாண்டு மருந்துகளை மக்களுக்கு விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

இதன்  போது மருத்துவ ஆலோசனைகள் ,என்பவற்றை பெற்று கொள்ள முடியும்.வீடுகளுக்கு மருந்துகளை கொண்டு செல்லும் முகமாக
எங்களது உத்தியோகதர்கள் உங்கள் காலடிக்கு வந்து இச் சேவையினை முன்னெடுப்பார்கள்.

இங்கு வழங்கிய தொலைபேசி இலக்ககம் மூலம் உங்கள் அவ் பிராந்தியங்களில்காணப்படுகின்ற வைத்தியசாலைகள் மூலம் பொதுமக்கள் சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் சேவை பெறுவோர் தமது சரியான முகவரியை வழங்க வேண்டும் அப்போது தான் எமது சேவையை இலகுவாக வழங்க முடியும் .

இங்கு வழங்கிய தொலைபேசி இலக்கங்கள் பிஸியாக காணப்பட்டால் குறித்த இலக்கங்களின் வட்ஸ்அப்,வைபர்,அல்லது குறுந்தகவல் மூலம் அறிவிக்கலாம்.

குறிப்பாக வெளிநாட்டு இருந்து வரும் நபர்கள் மற்றும் கோவிட் தொற்று அதிகமாக உள்ள பகுதியில் இருந்து எமது பகுதிக்கு புதிதாக இடம்பெயர்ந்து யாரும் வசித்தால் நீங்கள் எமது தொலைபேசி இலக்கம் அல்லது எமது சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும் இது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.

மேலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய் பிரிவின் வைத்திய அதிகாரி நாகூர் ஆரிப் கருத்து தெரிவிக்கையில்

இன்று கோவிட் தொற்று உலகில் மாத்திரமல்ல எமது நாட்டில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது .இதற்கமைய கல்முனை பிராந்தியத்தில் மக்கள் மத்தியில் பரவி விட கூடாது என்பதற்காக சுகாதார அமைச்சின் வழிகாட்டலில் எமது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் ஜி.சுகுணன் தலைமையில் பல நடவடிக்கை முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். பொது மக்கள் தங்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் முக்கியமாக பொது மக்கள் சமுக இடைவெளி, கைகழுவுதல் போன்ற விடயங்களைமுறையாக பேண வேண்டும் .


கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை பகுதிகளில் உள்ள சுற்றாடல் பகுதிகளில் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் கிருமிகளை அழிக்க கூடிய இரசாயன பாதார்தங்கள் தெளிக்கப்பட்டு வருகின்றது என்றார்.

இதன் போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பணிப்பாளர் எம்.சீ. எம்.மாஹிர் ,கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தாய் சேய் நல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ. எம்.பஸால் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours