மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் வேறு மாவட்டங்களைப் போலல்லாது இம்மாவட்டத்தில் இரு சமுகத்தினரும் ஒன்றித்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் எமது மூதாதையர்கள் இரு சமுகங்களாகவே பார்க்கப்படாமல் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். பிற்பட்ட காலங்களில் சமுகங்கள் வளர்ச்சியடைந்து வெவ்வேறு சூழல்களால் மாற்றங்கள் ஏற்பட்டு தவிர்க்கமுடியாத சம்பவங்கள் பல நடைபெற்றன. தற்போது அவை எல்லாவற்றையும் கடந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம். ஒரு அரசாங்க அதிபராக கடமையினை மேற்கொள்வதானால் இரு சமுகங்களையும் ஒன்றுபோல்தான் நடாத்த வேண்டும். அப்போதுதான் எனது கடமையின் வெற்றியினை காணமுடியும் எனத் தெரிவித்தார்.
காத்தான்குடியில் 35 வருடகாலமாக சிவில் சமுக அமைப்பாக செயற்பட்டு வருகின்ற காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் தலைவர் பொறியியலாளர் எம்.எம். தொபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதய ஸ்ரீதர், உதவி பிரதேச செயலாளர். காத்தான்குடி தள வைத்தயசாலை வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜாபிர், எம்.எஸ். சில்மியா, நகரசபை செயலாளர் றிப்கா சபீன், சம்மேளன செயலாளர் எம்.ஐ.எம். ஜவாஹிர் பலாஹி, முன்னாள் தலைவர் எம்.சீஎம்.ஏ. சத்தார், முன்னாள் செயலாளர் எஸ்.எம்.கே. முகமட், சமூகசேவையாளர் கலீல் ஹாஜியார் உட்பட சம்மேளன பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours