.
(காரைதீவு   சகா)

கிழக்கு மாகாணம் தமிழருக்குரியது. எதிர்வரும் மாகாணசபைத்தேர்தலில் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் நாம் போட்டியிடுவோம். எனினும் அனைத்ததமிழ் தரப்புகளும் ஓரணியில் போட்டியிடுவதன்மூலம் ஆட்சியைத்தீர்மானிக்கின்ற சக்தியாக நாம் விளங்கமுடியும். அதற்கான சகல தரப்புகளையும் ஓரணியில் சேர அழைக்கின்றோம்.

இவ்வாறு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் அம்பாறை மாவட்ட பேராளர்கள் முன்னிலையில் பேசுகையில் அழைப்புவிடுத்தார்.

அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் புத்திஜீவிகள் கலந்துகொண்ட மாவட்டமட்டக்கூட்டம் நேற்றுமுன்தினம் சொறிக்கல்முனையில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சோ.புஸ்பராசா தலைமையில் அவரது வாசஸ்தலத்தில் நடைபெற்றது.

கட்சியின் முக்கியஸ்தர்களான எஸ்.யோகவேல் த.ஈஸ்வரராஜா தலைவர் சோ.புஸ்பராசா ஆகியோரும் உரையாற்றினர்.

அங்கு பிரசாந்தன் மேலும் பேசுகையில்:
நாம் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தால் நிச்சயம் ஒரு தேசியபட்டியல் ஆசனத்தை பெற்றிருக்கமுடியும்.ஆனால் இங்கு வாக்குகளைச் சிதறடித்து ஆசனத்தை இல்லாமலாக்கவிரும்பாத காரணத்தினால்தான் நாம் போட்டியிடவில்லை.

சிறைக்குள்ளிருந்து சாதனை வாக்குகளைப்பெற்ற எமது தலைவர் கிழக்குமக்களின் விடிவெள்ளி அண்ணன் பிள்ளையான் நாளைமறுதினம் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்கிறார். அமைசசராகுவார்.வெகுவிரைவில் அவர் வெளிவருகிறார்.

அவர் பாராளுமன்றம் சென்றுவந்தபிறகு கிழக்கை மீண்டும் தமிழன் ஆளுவதற்கான சகல அரசியல் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவிருக்கிறோம்.
நடந்துமுடிந்த தேர்தல் அபிவிருத்தியை மையப்படுத்திய செய்தியை சொல்லியிருக்கிறது. மட்டக்களப்பில் 4தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுத்தந்துள்ளனர் தமிழ்மக்கள். எனவே அவர்களுக்கான சேவையை அபிவிருத்தியை நாங்களனைவரும் இணைந்து சேர்ந்து மேற்கொள்ளவேண்டும் என்பதே எனது ஆசை.கட்சியின் விருப்பமும் அதுதான்.

அம்பாறை மாவட்டத்தை நாம் ஒருபோதும் கைவிடமாட்டோம். இணைந்து செயற்படுவோம். என்றார்.

தலைவர் சோ.புஸ்பராசா அங்குரையாற்றுகையில்:
சிறைக்குள்ளிருந்துகொண்டு கிழக்கில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று அமைச்சராகும் அண்ணன் சிவ.சந்திரகாந்தனை பாராட்டுகிறேன். அம்பாறை மாவட்டம் சார்பில் வாழ்த்துகிறேன். அவர் செய்த சேவைக்கு மக்கள் வழங்கிய அங்கீகாரம் அது. அதனை வெளியிலிருந்து செயற்படுத்திய செயலாளர் தம்பி பிரசாந்தனும் பாராட்டுக்குரியவர். இதெல்லாம் வரலாற்றுச் சாதனைகள். என்றார்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours