(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  

மட்டக்களப்பு மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் வழிகாட்டலில்  மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்கு வித்து அவர்களி உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் மட்டு முயற்சியான்மை 2020 எனும் விசேட திட்டம் மாவட்டரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. 

இதனடிப்படையில் மன்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் செயற்பட்டு வருகின்ற சிறுதொழில் முயற்சியாளர்களின் உள்ளுர் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சியினை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா இன்று (26) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார். 

சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு மாவட்ட மேற்பார்வை உத்தியோகத்தர் சி. வினோதின் ஒழுங்கமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சியில் உள்ளுர் உற்பத்தியார்கள் தமது உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்தனர். 

இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ. வாசுதேவன், உதவி பிரதேச செயலாளர்களான திருமதி. லக்ஷன்யா பிரசாந்தன், ஜீ. அறுணன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். பிரனவசோதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ. சுதர்சன், கணக்காளர் எஸ். புவனேஸ்வரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ரீ. சத்தியசீலன், மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன், மாவட்ட சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours