(வி.ரி.சகாதேவராஜா)

இந்து சமய கலாசார  அலுவல்கள்  திணைக்களத்தின்  ஏற்பாட்டில்  திருக்கோவில் பிரதேச செயலகமும்இ அறநெறிப்  பாடசாலைகளும்  இணைந்து  நடத்தும்   மாணவர்களுக்கு  நீதி நூல்கள் மற்றும்  துணைநூல்கள் வழங்கும்   அறிமுக விழா  ஞாயிற்றுக்கிழமை    திருக்கோவில்  பிரதேச  செயலக கட்டிடத்தில்  இடம்பெற்றது.
 
இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர்  த.கஜேந்திரன் தலைமையில் ,  முன்னிலை  அதிதியாக  இந்துமத  குருமார்கள் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட  மேலதிக  அரசாங்க  அதிபர்  வே.ஜெகதீசன்,  சிறப்பு  அதிதியாக   உதவிப் பிரதேச  செயலாளர்  கே. சதிஸ்சேகரன், கணக்காளர்   எஸ். அரசரெட்ணம், நிர்வாக உத்தியோகத்தர் காணி உத்தியோகத்தர் திருக்கோவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.எஸ் ரவீந்திரன்,  பாடசாலைகளின் அதிபர்கள், இந்து மன்றங்களின்  தலைவர்கள்,  ஆலயதர்மகர்த்தாக்கள்,  அறநெறிப்  பாடசாலை  மாணவர்களின்  பெற்றோர்கள்  மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டு நந்திக் கொடியேற்றப்பட்டதைத் தொடர்ந்து அறநெறிக் கீதம் மாணவர்களால் பாடப்பட்டு இந்து குருமார்கள் மற்றும் அதிதிகளின் மங்கள விளக்கேற்றல் பிரார்த்தனையோடு நிகழ்வு மங்களகரமாக ஆரம்பமாகி இருந்தன.

இதனைத் தொடர்ந்து அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நீதி நூல்களின் கண்காட்சிகள் ஆகிய இடம்பெற்று இருந்ததுடன் அதிதிகளின் சிறப்புரைகளும் இடம்பெற்று இருந்தன.

இதனைத் தொடர்ந்து நீதி நூல்கள் பற்றிய விளக்கவுரைகள் இடம்பெற்று இருந்ததோடு இந்து மத குருமார்கள் பாடசாலை அதிபர்கள் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் அதிதிகள் ஆகியோருக்கும் நீதி நூல்கள் கையளிக்கப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக இந்து ஆலய குருமார்களும் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிஸ்கரன் கணக்காளர் வி.அரசரெத்தினம் சிறப்பு அதிதிகள், பாடசாலை அதிபர்கள் ஆலய நிருவாகிகள் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள் மாவட்ட பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours