( வி.ரி.சகாதேவராஜா)


கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுக்களின்  எண்ணிக்கை எட்டாயிரத்தைத்தாண்டியுள்ளது.  இதுவரை 8104 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவிற்கு 126பேர் பலியாகியுள்ளனர். கடந்த இருஅலைகளைவிட இந்த மூன்றாவது அலையில் மரணவிகிதம் படிப்படியாக அதிகரித்துவருகிறது.
இரண்டாம்அலையின்போது மொத்தமாக 26 என என்றிருந்த மரணத்தொகை மூன்றாவது அலையின்போது கிட்டத்தட்ட நான்கு மடங்காகி தற்போது 100ஆக அதிகரித்துள்ளது. அதன்படி மொத்த பலியுயிர் தொகை 126 ஆக உயர்ந்துள்ளது.
மட்டக்களப்பில் மட்டும் நேற்றுமுன்தினம் 116பேர் தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் மூன்றாவது அலையில் இதுவரை 4242 பேருக்கு கொரொனாத்தொற்று ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது அலையில் திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 2040 பேரும் ,அம்பாறைப்பிராந்தியத்தில் 1049, பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 992 பேரும்  ,   கல்முனைப்பிராந்தியத்தில் 161 பேரும்  தொற்றுகுள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் இரண்டாயிரத்தை தாண்டியிருக்கிறது. அதாவது  2040பேர் கொரோனாத்தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அதன்படி கிழக்கில் திருமலை மாவட்டம் ஆபத்தான நிலையிலிருப்பதை அவதானிக்கக்கூடியதாயுள்ளது.முதலிருஅலைகளின்போது ஆக 864ஆகஇருந்த இவ் எண்ணிக்கை தற்போது மூன்றாவது அலையுடன் மொத்தமாக 3026ஆக எகிறியுள்ளது.
கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்ட புள்ளிவிபரங்களிலிருந்து இதனை அறியமுடிகிறது.

கிழக்கு மாகாணத்தில் மூன்று அலைகளிலும் மொத்தமாக இதுவரை 8107பேர் தொற்றுக்கிலக்காகிய அதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் 3026பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தொற்றுக்குள்ளான 8107 பேரில் இதுவரை 6495பேர் குணமாகிவீடு திரும்பியுள்ளனர். அதேவேளை 126பேர் மரணிக்க 1490பேர் தொற்றிலுள்ளனர்.

கிழக்கில் கொரோனா முதல் அலையில் 23பேரும் இரண்டாவது அலையில் 3842பேரும் தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.தற்போது மூன்றாவது அலையில் இதுவரை 4242பேர் இலக்காகியுள்ளனர்.

126பேர் மரணம்!
கிழக்கில் இதுவரை 126பேர் மரணித்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 72பேரும், அம்பாறைப்பிராந்தியத்தில் 16 பேரும் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 பேரும்    , கல்முனைப்பிராந்தியத்தில்  13 பேரும்  மரணித்துள்ளனர்.

கிழக்கில் முதலிரு அலைகளில் 26பேர் பலியாகியிருந்தனர். ஆனால் மூன்றாவது அலையில் இதுவரை 100பேர் பலியாகியுள்ளனர் என்பது இவ்வண் ஈண்டுகுறிப்பிடத்தக்கது.
கிழக்கிலுள்ள 10 கொரோனா சிகிச்சைநிலையங்களில் தற்போது 783பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours