காரைதீவு   சகா

கொரோனா தீநு ண்மியின் தாக்கத்தின் எதிரொலியாக அமுலிலுள்ள பயணத்தடை காரணமாக பாதிக்கப்பட்ட ஒருதொகுதி  மிகவும் வசதி குறைந்த 50குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

கணடாவைச் சேர்ந்த அசோகன் ஆதிராவின் பிறந்த நாளையொட்டி இவ்வுதவி அம்பாறை மாவட்ட சமுக செயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

பயணத்தடை காரணமாக பட்டினி கிடக்கின்ற மிகவும் வறிய  குடும்பங்களுக்கே இவ்வுதவி வழங்கப்பட்டிருப்பது மகிழ்சியளிக்கிறதெனவும் விரைவில் பெரியநீலாவணைப்பிரதேசத்திலும் மற்றுமொரு உதவி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours