(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில்  91 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன்  (19) புதன்கிழமை தெரிவித்தார்.

அதேவேளை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31 பேருக்கும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 06 பேருக்கும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும் , வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், பட்டிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாதுகாப்பு பிரிவில் ஒருவருக்கும் கோறளைப்பற்று மத்தி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் கைதிகள் 44 பேர்  உட்பட 91 பேருக்கு தொற்று  கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய மாவட்டத்தின்  14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் கொரோனா தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours