இ.கி.மிசன் அம்பாறை மாவட்டத்தில் 600உலருணவுப்பொதிகள் விநியோகம்.
( வி.ரி.சகாதேவராஜா)
இராமகிருஸ்ணமிசனின் மட்டு.மாநிலக்கிளை அம்பாறை மாவட்டத்தில் கொடிய கொரோனாவால் வாழ்வாதாரத்தையிழந்த நான்கு பிரதேசங்களைச்சேர்ந்த 600குடும்பங்களுக்கு ஒரு தொகுதி உலருணவு நிவாரணங்களை வழங்கிவைத்தது.
மட்டு.இ.கி.மிசன் மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தா ஜீ தலைமையில் இவ்வுலருணவு விநியோகம் இடம்பெற்றது.உதவி மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ நெறிப்படுத்தலில் இவை வழங்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் நாவிதன்வெளி பிரதேசசெயலாளர் என்.ரங்கநாதன் ஆகியோரும் கலந்துகொண்டு அவற்றை வழங்கிவைத்தனர்.







Post A Comment:
0 comments so far,add yours