(எம்.எம்.ஜபீர்) 
சம்மாந்துறை அமீர் அலி பொது நூலகத்திற்கு ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் கலாபூஷணம் யூ.எல்.அலியார் அவர்களினால் ஒரு தொகுதி நூல்கள் இன்று(05) அன்பளிப்பு செய்யப்பட்டது. சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஏ.எம்.முஹம்மட் நௌஷhட் அவர்களிடம் ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் கலாபூஷணம் யூ.எல்.அலியார் 30 நூல்களை கையளித்தார். 

 இந்நூல்களை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஏ.எம்.முஹம்மட் நௌஷhட், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் ஆகியோர்களினால் அமீர் அலி பொது நூலக நூலகர் ஏ.வீ.எம்.சர்ஜூனிடம் கையளிக்கப்பட்டது. இந்நூலகத்தின் உசாத்துணை பகுதியில் ஒய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் கலாபூணம் யூ.எல்.அலியார் அவர்களினால் எழுதிய நூல்கள் மற்றும் கல்வி சமூகம் பயன்பெறும் வகையில் அன்பளிப்பு செய்யப்பட்ட 153 நூல்கள் தனிகாப்பகத்தில் பாதுகாப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours