(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு)
அம்பாரை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பிரதான வீதியில் உள்ள உஷா நகையகம் பட்டப்பகலில் கொல்லையிடப்பட்டுள்ளதாக தெரிக்கப்பட்டு ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்
இச் சம்பவம் நேற்று செவ்வாய்க் கிழமை (26) பிற்பகல் வேளையில் இடம்பெற்று இருந்ததாக நகைக்கடை உரிமையாளர் தெரிவித்து இருந்தார்.
குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் ஊடாக தெரியவருவது யாதெனில் நேற்று பிற்பகல் 3.30 மணிளயவில் நகைக் கடைக்குள் நுழைந்த சந்தேக நபர் கடையில் இருந்த நபருக்கு மிளகாய்த் தூள் விசிறி நகைகளை கொள்ளையடிக்க முட்பட்டுள்ளார்
இதன்போது நகைக் கடையில் இருந்த கடை உரிமையாளரின் மருமகனுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் சண்டையிடும் காட்சிகள் அங்கு பொறுத்தப்பட்டு இருந்த சீசீடி கமரா பதிவாகி இருந்தன.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நகைக்கடை உரிமையாளர் மற்றும் பொது மக்கள் குறித்த நபரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்து இருந்தாக கடை உரிமையாளர் தெரிவித்து இருந்தார்.
இவ் சம்பவம் தொடர்பாக திருக்கோவில் பொலிசார் அம்பாரை குற்றத் தடையாய்வு பொலிசாருடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த சந்தேக நபர் பொலிசாரினால் விசாரினைகள் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours