பேச்சுத்திணறல் ஒருவரின் இயல்பு வாழ்க்கையில் பாரிய சவால்களை ஏற்படுத்துகின்றது. அதனை பேச்சுத்திணறல் (Stuttering/ stammering) அல்லது பேச்சு கொன்னல் என்பார்கள். இதற்கு சிகிச்சை அவசியமென கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளரும் மட்/போதனா வைத்தியசாலையின் விசேட குழந்தை நல வைத்திய நிபுணருமான வைத்தியகலாநிதி வைத்தியர் .விஜி திருக்குமார் தெரிவித்தார்.
சிறுவரிடையே பரவலாக காணப்படும் திக்குவாய் அல்லது கொன்னல் தொடர்பாக கேட்டவினாக்களுக்கு அளித்த விளக்கங்கள் இங்கு தரப்படுகின்றன.
திக்கு வாய் என்றால் என்ன?
திக்கு வாய் என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படும் பேச்சு தினறல் நோய் நிலமை சிறியவர்களுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்படும்.அதாவது கோர்வையாக தொடர்ந்து பேசுவதில் சிரமம் ஏற்படுதலே பேச்சு தினறல் ஆகும்.ஒரு சொல்லின் உச்சரிப்பைஃஒரு சொல்லை திரும்ப திரும்ப கூறுதல்இபேச ஆரம்பிக்கும் போது அல்லது பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் வசனம் தடைப்படல்ஒரு உச்சரிப்பை நீட்டி உச்சரித்தல் இதன் பொதுவான அறிகுறிகள் ஆகும்.
1. நரம்பு செல்கள் விருத்தி அடையும் போது ஏற்படும் தாமதம் அல்லது மாறுபாடு.இது developmental stuttering என அழைக்கப்படும். பொதுவாக 2-4 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ஏற்படும்
2.ஏதாவது ஒரு நோய் நிலமை ஏற்பட்டதன் காரணமாக பேச்சு தினறல் ஏற்படல்.இது Neurogenic stuttering என அழைக்கப்படும்.இதனை சிறியவர்இபெரியவர் இருவரிலும் பொதுவாக அவதானிக்கலாம்.
3.மன ரீதியான அழுத்தங்களினால் ஏற்படுதல் அதாவது திடிரென நிகழ்ந்த அதிர்ச்சியான அல்லது சோகமான ஒரு சம்பவத்தின் பின்னர் பேச்சு தினறல் ஏற்படல்.இது Psychogenic stuttering என அழைக்கப்படும்.இதனை சிறியவர் பெரியவர் இருவரிலும் நிகழலாம்.
காட்டும் அறிகுறிகள்
சிறுவர்கள் தனக்கு பேச்சு கொன்னல் பிரச்சினை இருக்கு என்பதை உணர முன்னர் தொடர்பாடல்களை மேற்கொள்வதில் சிரமங்களை சந்திப்பார்கள்.
பேச்சு திணறல் ஏற்படும் பேது உடல் ரீதியாகவும் சில செயற்பாடுகளை வெளிப்படுத்துவார்கள். உதாரணமாக கண்களை அதிகமாக சிமட்டல்இ கைகளை உதறல்ஃ அடித்தல் ...
தனது பேச்சு கொன்னலை தெரிந்து கொண்டதன் பின்னர் தங்களை பிறரிடம் இருந்து தனிப்படுத்திக் கொள்வார்கள்.
மற்றவர்களுடன் உரையாட தயங்குவார்கள் பயப்படுவார்கள்.
உளரீதியான அழுத்தங்களும் அதிகரிக்கும்.
மேலும் பாடசாலையில் ஆசிரியர் சக மாணவர்களுடன் உரையாட தயங்குவார்கள்.
மேடைப் பேச்சுக்கள் மற்றும் கலை விழாக்களில் ஈடுபட மாட்டார்கள்.
தெரிந்தவர்களுடன் உரையாடும் போது கூட கண்களை பார்க்காமல் , அவதானிக்காமல் பேசி முடிப்பார்கள்.
பெரியவர்கள் தங்களது பேச்சு பிரச்சினையை மறைக்க அதிகமாக தங்களை தாங்களே தனிமைப்படுத்துவார்கள்.
எந்த உச்சரிப்பில் திக்கு ஏற்படுகிறதோ அதற்கு பதிலாக வேறு இலகுவான செற்களை பாவித்து பேச முயற்சிப்பார்கள்.
பிறருக்கு தங்களை அறிமுகப்படுத்துவதிலும் இநேர்காணலை தொடர்வதிலும் அதிக அளவில் சிரமப்படுவார்கள். மன ரீதியான அழுத்தம் உடையவர்களாகவும் தன்னம்பிக்கை குறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.
சிறுவர்கள் தனக்கு பேச்சுத்திணறல் இருக்கின்றது என்பதை உணர்ந்தால் பல விடயங்களில் தாழ்வுமனப்பான்மையு.டன் பின்னடிப்பார்கள்.
சிகிச்சை இருக்கிறதா?
பேச்சு திணறல் பிரச்சினை ஏற்படும் போது உரிய நேரத்தில் வைத்தியரை நாடி அவற்றுக்கான காரணங்கள்இவகைகளை கண்டறிந்து சிகிச்சை முறைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.இவற்றின் மூலமாக சிறந்த முன்னேற்றகரமான விருத்தியை அவதானித்தலுடன் மன அழுத்ததையும் குறைக்கலாம்.
( வி.ரி.சகாதேவராஜா)
.
Post A Comment:
0 comments so far,add yours