( வி.ரி.சகாதேவராஜா)

ஆழிப்பேரலை தென்கிழக்காசியாவைத் தாக்கி 17வருடங்கள் நிறைவுபெற்றமையொட்டி அதில் உயிர்நீத்த உறவுகளுக்கான ஆத்மாஞ்சலி பிரார்த்தனை நிகழ்வு காரைதீவில் உணர்வுபூர்வமாக (26) இடம்பெற்றது.

காரைதீவு கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவுத்தூபியடியில் நடைபெற்ற இச் சுனாமி நினைவுதினநிகழ்வை இந்துசமயவிருத்தி சங்கமும், மீனவர்சமுகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

ஆன்மீக அதிதியாகக்கலந்துகொண்ட சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் ,சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் ஆகியோர் நந்திக்கொடி ஏற்றி சுனாமி நினைவுத்தூபிக்கு மலர்மாலை அணிவித்து பஞ்சாராத்தி காட்டி விசேட பூஜை நிகழ்த்தினர்.

தொடர்ந்து சுனாமி தீபமேற்றல் நிகழ்வும் கடலுக்கு புஸ்பாஞ்சலி நிகழ்வும் நடாத்தப்பட்டது. 5நிமிடநேரம் இறந்தவர்களுக்கான மௌனாஞ்சலியும் சாந்தி மந்திரமும் ஓதி நிகழ்த்தப்பட்டது.

இந்துசமயவிருத்திச்சங்க முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமைதாங்கிய நிகழ்வில் ,  காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில், பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் ,அறங்காவலர் ஒன்றிய செயலாளர் சி.நந்தேஸ்வரன் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர்.

ஆலயஅறங்காவலர்கள், காரைதீவு பொலிஸ்நிலைய பொறுப்பதிகரி ஆர்.ஜெகத் ,அறநெறிமாணவர்கள் முக்கிய பிரமுகர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இந்துசமயவிருத்திச்சங்க செயலாளர் கு.ஜெயராஜி  நன்றியுரையாற்றினார்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours