இ.சுதாகரன்

மண்முனை பிரதேச சபையின் ஊடாக நடாத்தப்படும் கணனி பயிற்சி நிலையத்தின் மூலம் NVQ 3 சான்றிதழ் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான தகவல் தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் பயிற்சியினை பூர்த்தி செய்த ஐம்பது ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் மண்முனை பிரதேச சபையின் தவிசாளர் த.தயானந்தன் அவர்களின் தலைமையில் மண்முனை நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.


நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு ,மட்டக்களப்பு மத்தி ,மட்டக்களப்பு மேற்கு ,பட்டிருப்பு கல்வி வலயங்களின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் உதவிக்கல்விப் பணிப்பாளர்கள்.மண்முனை பிரதேச சபையின் செயலாளர்,சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்,கணனி பயிற்சி நிலைய பயிற்றுவிப்பாளர்கள்,கணனி பயிற்சி நிலைய உத்தியோகத்தர்கள் ,ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours