( வி.ரி. சகாதேவராஜா)

உலகப் புகழ்பெற்ற ஓவியர் மு. பத்மவாசன் நாவிதன்வெளி பிரதேசத்திற்கு நேற்று விஜயம் செய்தார்.

அங்கு அவர் நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் சித்திரபாட மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வரைதல் பயிற்சி பட்டறையை நேற்று  நடாத்தினார்.

பாடசாலை அதிபர் சீ.பாலசிங்கனின் வரவேற்பில்    பாடசாலை இணைப்பாளரும் உதவி கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா  தலைமையில் இவ் வைபவம் நடைபெற்றது.

 " அறநெறி ஒழுக்கமுள்ள மனிதனை உருவாக்கும்" " அறநெறி ஓவியங்களூடாக இறைவனை காணுதல் " என்னும் தொனிப்பொருளில் இப் பட்டறையை நடாத்தினார்.

நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன் அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
 இந் நிகழ்வில் ஓய்வு நிலை ஆசிரியர் வி.மகேஸ்வரன் பிரதி அதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன்  உதவி அதிபர் என்.வன்னியசிங்கம்  ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

அம்பாரை மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜீ முன்னதாக உலக ஓவியர் மு. பத்மவாசன் தொடர்பான அறிமுக உரை நிகழ்த்தினார்.  
அறநெறி வகுப்புகளுக்கு இதுவரை செல்லாத மாணவர்களை அறநெறிக்கு ஈர்க்கும் வகையில் ஓவியர் பத்மவாசனின் உரை அமைந்திருந்தது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours