ஈழத்தில் சைவமும் தமிழும் வளர்த்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் பெருமானின் குருபூஜை நாளை (14) புதன்கிழமை ஆகும்.
அதனை முன்னிட்டு இன்று அம்பாறை பெரிய நீலாவணை விஷ்ணு ஆலயத்தில் அந்தர் யாகம் சைவப் பிராமணர்களால் நடாத்தப்படவுள்ளது.
இந்து சமய கலாசார அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி இதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
இதேவேளை, ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டை முன்னிட்டு இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த புத்தக கண்காட்சியும், விற்பனையும் காரைதீவு விபுலானந்த மணி மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
முதல் நாள் மட்டும் , சுமார் இரண்டு லட்சம் வரை அமோக விற்பனை இடம்பெற்றது.இவ் விற்பனைக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் திருமதி எழில்வாணி பத்மகுமார் பொறுப்பாளராக செயற்பட்டார்.
நேற்றும் பாடசாலை மாணவர்கள் சகிதம் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

Post A Comment:
0 comments so far,add yours