( வி.ரி. சகாதேவராஜா)

 பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனையின்   புதிய வலயகல்வி பணிப்பாளராக செபமாலை மகேந்திரகுமார் நேற்று (2)திங்கட்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஏலவே கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராகவிருந்த திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் இதே பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளராகவும் கடமையாற்றி நேற்று முன்தினம் ஓய்வு பெற்றதனால் வெற்றிடமேற்பட்டது.

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 1 ஐச்சேர்ந்த
இவர் இதுவரை அதே வலயத்திலே பிரதி கல்வி பணிப்பாளராக கடமை ஆற்றி வந்தார்.


 மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி அதிபராகவும் ,
கிழக்கு மாகாண கல்வி திணைக்களம், திருக்கோவில் , மட்டக்களப்பு மேற்கு,  பட்டிருப்பு ஆகிய வலயங்களில் பிரதிக் கல்வி பணிப்பாளராக கடந்த 15 வருடங்களாக பணியாற்றி வந்தவர்.

 நேற்று முதல் வலயக்கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வுபெற்ற  செபமாலை மகேந்திரகுமார் பாண்டிருப்பைச் சேர்ந்தவராவார்.

நேற்றைய பதவியேற்பு விழாவில் கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours