துறைநீலாவணை நிருபர்


அம்பாரைமாவட்ட விபுலானந்தப் புனர்வாழ்வுக் கழகத்தின் ஏற்பாட்டில் இவ்வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள துறைநீலாவணைக் கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கான இலவசவகுப்பு இன்று 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை மெதடிஸ்தன் மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வு  துறைநீலாவணை சித்திவிநாயகர் வித்தியாலயத்தின் அதிபர் சோ.செல்வம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அம்பாரைமாவட்ட புனர்வாழ்வுக் கழகத்தின் பிரதித் தலைவர் ஓய்வுநிலை பொறியியலாளர் சர்வானந்தா மற்றும் இம்மாணர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர் சா.நடனசபேசன் ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் துறைநீலாவணையில் உள்ள 3 ஆரம்பப் பாடசாலைகளிலும் தரம் 4 இல் கல்விகற்றுக்கொண்டிருக்கும் மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours