இ.சுதா
மண்முனை தென்எருவில் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனமும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கைக் குடியரசின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் பிரதேச இளைஞர் கழக சம்பளனத் தலைவர் த.சபியதாஸ் தலைமையில் நடைபெற்றது.நிகழ்வில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி T.அபய விக்கிரம மற்றும் களுவாஞ்சிகுடி பிரதேச பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி கே.ரகுபாலன்,இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் கு.துசாந்தன், சிவில் சமுகத்தின் பிரதி நிதிகள் ,பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.இதன் போது மரக்கன்றுகளும் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Post A Comment:
0 comments so far,add yours