(எஸ்.அஷ்ரப்கான்)


கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாசல், முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல், ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் வழமைபோன்று இடம்பெற்ற  புனித  நோன்புப் பெருநாள் நபி வழித் திடல் தொழுகைஆயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலுடன் இன்று சனிக் கிழமை (22) காலை 6.45 மணிக்கு இடம்பெற்றது.


ஆண்பெண் இருபாலாருக்கும் ஒரே ஜமாஅத்தாக இடம்பெற்ற இத்தொழுகை யையும்குத்பா பிரசங்கத்தையும் மௌலவி எஸ்.எல்.எம்.நிக்ராஸ் (தௌஹீதி) நடாத்தி வைத்தார்.


இம்முறை வழமையைவிட அதிகமாக கல்முனை, சாய்ந்தமருது மற்றும் கல்முனை இஸ்லாமாபாத் பிரதேசங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் சந்தோசத்துடன் புனித நோன்புப் பெருநாள்  நபிவழி திடல் தொழுகையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours