( காரைதீவு சகா)
வரலாற்று
பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்பாள்
ஆலயத்தின் முதலாவது வருடாந்த அலங்கார உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது .
முதலாவது நாள் திருவிழா பொத்துவில் பிரதேச தமிழ்மக்களால் உபயமளிக்கப்பட்டது.
உற்சவகால
பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ
ச.கோவர்த்தன சர்மா சமுகத்தில் வருஷாபிஷேக கிரியைகள் நடைபெற்று வருகின்றன.
நேற்றுமுன்தினம் (27) வியாழக்கிழமை கல்முனை மேற்கு தமிழ் மக்களின் இரண்டாம் நாள் திருவிழா நடைபெற்றது.
நேற்று (28) வெள்ளிக்கிழமை நிந்தவூர் அட்டப்பள்ளம் மக்களின் மூன்றாம் நாள் திருவிழா நடைபெற்றது.
. இன்று(29) சனிக்கிழமை காரைதீவு மக்களின் நான்காவது நாள் திருவிழா நடைபெறும்.
இவ்வாறு
தொடர்ச்சியாக ஒன்பது தினங்கள் பகல் அலங்கார உற்சவ திருவிழாக்கள் இடம்
பெற்று எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் தேதி சித்ரா பௌர்ணமி அன்று தீர்த்த
உற்சவத்துடன் நிறைவடைய இருக்கின்றது .
30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாற்குட பவனி இடம் பெற ஏற்பாடாகி உள்ளது.
இந்த
பத்து நாள் அலங்கார உற்சவ திருவிழாக்காலங்களில் காலை 10 மணிக்கு கும்ப
பூஜையுடன் ஆரம்பமாகி பகல் ஒரு மணிக்கு அலங்கார உற்சவ பிரதான பூஜை,
அம்பாளின் வீதியுலா இடம் பெறும். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு தினமும்
அன்னதானம் வழங்கப்படும் . இரவு நேர பூஜை திருவிழாக்கள் இடம்பெறமாட்டாது
என்று ஆலய பரிபாலன சபைத் தலைவர் கே. ஜெயசிறில் தெரிவித்தார்.
பத்து
தினங்களுக்கான உற்சவகால திருவிழாக்களையும் அன்னதானத்தையும் அம்பாறை
மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பிரதேசங்கள் பொறுப்பேற்று நடாத்துகின்றமை
குறிப்பிடத்தக்கது.




Post A Comment:
0 comments so far,add yours