(எம்.எம்.றம்ஸீன்)
நிந்தவூர் அறபா விளையாட்டு கழகம் அண்மையில் நடாத்திய மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் போது பொதுமக்களிடமிருந்து நன்கொடையாக வசூலிக்கப்பட்ட ஒரு தொகை நிதியை கிழக்கு மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள ஏறாவூர் புற்று நோயாளர் பராமரிப்பு நிலையத்தின் பராமரிப்பு தேவைக்காக அண்மையில் அன்பளிப்புச் செய்யப்பட்டதாக அறபா விளையாட்டுக் கழகத்தின் சமூக சேவை பிரிவின் தலைவர் ஏ.எல்.முபீன் தெரிவித்தார்.
கடந்த மாதம் 22 ம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில்
நடாத்தப்பட்ட மின்னொளியிலான கிரிக்கட் சுற்றுப் போட்டித் தொடரின் போது விளையாட்டு கழகத்தின் சமூக சேவைப் பிரிவினரின் அயராத முயற்சியினால் கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தினது நிதி சேகரிப்பு உண்டியல் மூலமான நிதி சேகரிப்பு விடயமானது பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டு நன்கொடை செய்வதற்கான வேண்டுகோளும் விடுக்கப்பட்டிருந்தது.
Post A Comment:
0 comments so far,add yours