கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகளின் பெற்றோருக்கும் கல்லூரி ஆசிரியர்களுக்குமிடையில் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடல் நிகழ்வு கல்லூரி அதிபர் ஏ.பி.நஸ்மியா சனூஸ் தலைமையில்(18 )நடைபெற்றது.
கல்லூரிக்கும் சமூகத்துக்கும் இடையிலான தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்கும் மாணவிகள் கல்வி செயற்பாடுகள், ஒழுக்கம், பரீட்சை பெறுபேறுகள், வகுப்பறை சூழல், பெளதீக வளங்கள் தொடர்பாக தரம் 6,7,8,9 மாணவிகளின் பெற்றோர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரதி, உதவி அதிபர்கள், பகுதித்தலைவர்கள் அப்பகுதிக்குரிய வகுப்பாசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours