தற்போது நிலவும் அசாதரண காலநிலை மாற்றம் காரணமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்திற்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நோய்
பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பருவப்பெயர்ச்சி மழையால் நாட்டின் பல பாகங்களிலும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவும் சாத்தியக்கூறு உள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர்,விஷேட வைத்திய நிபுணர் டொக்டர் சதத் சமரவீர தெரிவித்துள்ள நிலையில் இம்மாதம் 26 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதிவரை அரசாங்கம் நாடு தளுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.
அதனடிப்படையில் திங்கட் கிழமை பாடசாலை ஆரம்பித்ததும் அதிபர்,ஆசிரியர்கள்,கல்விசாரா உத்தியோஸ்தர்கள்,பெற்றோர்கள் பாடசாலை வளாகத்தை சிரமதான அடிப்படையில் சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன்,அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்,மத ஸ்தாபனங்கள், அரபுக் கல்லூரிகள், புதிதாக நிர்மாணிக்கப்டும் கட்டிடப் பகுதிகள்,வெற்று வளவுகள்,கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள தோணிகள்,படகுகள், பயன்படுத்தப்படாத வீடுகள், கிணறுகள் மற்றம் நீர்த்தாங்கிகள் என்பனவற்றை சுத்தம் செய்யுமாறும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.
பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைக்காக தங்களிடம் வரும் போது அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் பணிப்பாளர் பொதுமக்களை கேட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours