(எம்.எம்.றம்ஸீன்)

ஸ்ரீலங்கா ஹலால் சான்றுறுதிப் பேரவை  அமைப்பின் ஏற்பாட்டில் ஹலால் சான்றிதழ் வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு மாளிகைக்காடு பாவா ரோயல் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள்,சிவில் அமைப்புகள்,பொது நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள், கண்ணியத்திற்குரிய உலமாக்கள், சமூக நலன் விரும்பிகள் போன்றோரின் பங்களிப்புடன் மேற்படி நிகழ்வானது நடைபெற்றது. 

மேற்படி நிகழ்வில் 
ஸ்ரீலங்காரஹலால் சான்றுறுதிப் பேரவை நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டதுடன், உள்ளக ஷரீஆப் பிரிவின் தலைவர் அஷ்ஷேக் இர்பான் முபீன் (ரஹ்மானி) அவர்கள் மூலம் கலந்து கொண்டவர்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்குவது தொடர்பான பூரண தெளிவூட்டல்கள் வழங்கி வைக்கப்பட்டன.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours