பாறுக் ஷிஹான்


நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பராமாரிப்பை உரிய முறையில் மேற்கொள்ளாமை தொடர்பில் கேள்வியெழுப்பிய சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் உமர் அலிக்கு   இடமாற்றம்  வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் உரிய விசாரணைகளை பக்கச்சார்பின்றி நடாத்துமாறு கோரி இன்று மதியம் பொதுமக்கள் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த வைத்தியசாலையின் முன்பாக ஒன்று கூடிய மக்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பி உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்த சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் இடமாற்றம் குறித்து மீள்பரிசீலனை வேண்டும் என எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் நேற்று   சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் முஹமட் இஸ்மாயில் உமர் அலிக்கு இடமாற்றம் வழங்கியமை கண்டிக்கத்தக்கது எனவும் இவ்விடயம் குறித்து நீதியான விசாரணைகளை மேற்கொண்டு தீர்வினைப் பெற்றுக்க கொடுக்குமாறும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  அஷ்ரப் தாஹிர் எம்பி  சுகாதார அமைச்சரை பாராளுமன்றத்தில் வைத்து  கேட்டுக் கொண்டார்.

மேலும் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை சம்பந்தமான காணொளி ஒன்று ஒரு சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக இருந்தது. இது தொடர்பாக தாதியர் உத்தியோகத்தர் உமர் அலி தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் நடைபெறுகின்ற முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்கும்இ  நோயாளர்கள் பராமரிப்பில் கவனயீனமாக இருக்கின்றார்கள் என்பதை சுட்டி காட்டியதற்கும் டாக்டர்மார் நேரத்துக்கு கடமைக்கு வரவில்லை வராமல் மேலதிகநேர கொடுப்பனவுகளை எடுக்கின்றார்கள்
கடமைக்கு வராமல் பொது விடுமுறைகளில் ஓய்வு நாட்களில் வேலை செய்ததாக பொய்யாக ஆவணங்கள் பூர்த்தி செய்து அதனை வைத்திய அத்தியட்ச்சகர் உறுதிப்படுத்தி அதன் பின்னர் அதற்கான கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்று நான் கூறியதற்கு கிடைத்த பரிசு என  பாலமுனை வைத்தியசாலைக்கு  தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் உமர் அலி தனது முகப்புத்தகத்தில் தெளிவு படுத்தி கூறியுள்ளார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours