அணையா விளக்கு” மக்கள் எழுச்சி போராட்டத்தின் இறுதி நாளான நேற்றைய தினம், யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அவர்களை தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சாணக்கியன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் மற்றும் தமிழ் கட்சிகளை பிரதினுவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்பினர்கள் சகிதம் யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடி இருந்தார்கள். இதன் போது மக்கள் எதிர்நோக்கும் பல உரிமைகள் தொடர்பான விடையங்கள் கலந்துரையாடப்பட்டது. தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுங்கள் எனவும் வலியுறுத்தப்பட்டது.


போருக்குப் பின்னரும் தமிழர் தாயகப் பகுதிகள் பெரிதும் இராணுவமயமாக்கப்பட்டு, நில அபகரிப்புகள், மக்கள்தொகை மறுசீரமைப்பு, பொருளாதார புறக்கணிப்பு மற்றும் கலாசார அழிப்பு என்பவை  தமிழினத்தை அழிப்பதற்கான ஆயுதங்களாக அரசாலும், அரச படைகளாலும் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய ஆட்சியின் கீழும், இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நிறுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ புதிய அரசாங்கம் எந்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இவ்வாறான விடயங்களுக்கு சரியான சர்வதேச பொறிமுறை ஒன்றை செயற்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை எமது கட்சியின் சார்பாக முன்வைக்கப்பட்டது
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours