( வி.ரி.சகாதேவராஜா)

அம்பாறை மாவட்ட விபுலாநந்த புனர்வாழ்வு அமைப்பின் (ADVRO) அனுசரணையில் நடாத்தப்படும் உதவித்தாதிய பயிற்சிநெறியை பூர்த்தி செய்த மூன்றாவது தொகுதி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா நேற்று  28.07.2025 திங்கட்கிழமை மட். குருக்கள்மடத்தில் நடைபெற்றது .

குருக்கள்மடம் விபுலாநந்த முதியோர் பராமரிப்பு நிலைய மண்டபத்தில் அமைப்பின் தலைவர் டாக்டர் தியாகராஜா பெரியசாமி (தலைவர் ADVRO -UK)  தலைமையில் இவ் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் கு.சுகுணன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் இரா. முரளீஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ஏனைய அதிதிகளாக மருத்துவர்களான திருமதி பு.லோகநாதன் , வா.ஞானரெட்ணம் ,வீ.அற்புதன்) , மற்றும் சா.அருள்மொழி ( மா.ச.சே உத்தியோகத்தர்) , எந்திரி த.மயூரன் எந்திரி தே.சர்வானந்தன்,க, அழகரெட்ணம் ( போதனாசிரியர் உ.தா.உத்தியோகத்தர்) உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.நிகழ்வில் வரவேற்புரையினை விபுலானந்தhப் புனர்வாழ்வுக்கழகத்தின் இலங்கைக்கான  தலைவர் கலாபூசணம் சந்திரலிங்கம் நிகழ்த்தியதுடன் நன்றியுரையினை அமைப்பின் செயலாளர் கண வரதராஜன் நிகழ்த்தினார்

நிகழ்விலே உதவி தாதிப் பயிற்சியை நிறைவு செய்த மூன்றாவது தொகுதி மாணவர்கள் 16 பேருக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours