( சோ.செல்வம்)

  பெத்லகேம் விண்மீனின் பேரொளியும் திருக்கோவில் கல்வி வலய ஒளிவிழாவும் 

மண்ணுலகில் அமைதியையும், மனிதரிடையே அன்பையும் விதைப்பதற்காக விண்ணுலகின் பேரொளி மனித உருவெடுத்து வந்த பெருநாளே கிறிஸ்மஸ் பெருவிழா. இருள் சூழ்ந்த உலகில் ஒளியேற்ற வந்த இயேசு பாலனின் பிறப்பை முன்னிட்டு, திருக்கோவில் கல்வி வலயத்தினால் நடாத்தப்பட்ட 'ஒளிவிழா' நிகழ்வானது, வெறும் கொண்டாட்டமாக மட்டுமன்றி ஆன்மீகத் தெளிவையும் சமூக ஒருமைப்பாட்டையும் பறைசாற்றும் ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்தது.

நிகழ்வின் ஆரம்பமே ஒரு தெய்வீகத் தன்மையுடன் மிளிர்ந்தது. உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு. சோ. செல்வம் அவர்களின் நெகிழ்ச்சியான வரவேற்புரையுடன் விழா இனிதே ஆரம்பமானது. விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்றார். 

  நிகழ்வின் தலைமை விருந்தினராகவும் கலந்துகொண்ட வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. இரா. உதயகுமார் சேர் அவர்கள் ஆற்றிய தலைமை உரை சபையினரைச் சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்தது. ஒளிவிழா என்பது வெறும் மின்விளக்குகளின் வெளிச்சமல்ல அது மனித மனங்களில் பற்றவைக்கப்பட வேண்டிய கருணைத்தீ என்பதைத் தனது உரையில் கோடிட்டுக் காட்டினார்.

அவர் தனது உரையில், இயேசு பாலன் ஒரு மாட்டுத் தொழுவத்தில் மிக எளிமையாகப் பிறந்ததன் பின்னாலுள்ள தத்துவத்தை விளக்கினார்.

  'தாழ்மையே உயர்வின் அடிப்படை என்பதை இயேசுவின் பிறப்பு நமக்கு உணர்த்துகிறதுஇ' என அவர் சுட்டிக்காட்டினார்.

  புராணக் கதைகளையும் விவிலிய வரலாற்றுச் சான்றுகளையும் உதாரணங்களாகக் கொண்டு உலகிற்கு அமைதி ஏன் அவசியம் என்பதையும் கல்வியோடு கூடிய ஒழுக்கமே ஒரு மாணவனை முழுமைப்படுத்தும் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். இயேசுவின் வாழ்வு ஒரு பாடப்புத்தகம் போன்றது என்பதை அவரது உரை ஆழமாகப் பதிவு செய்ததுடன்இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் சிறுவர்கள் பெற்றோர்கள் அனைவருக்கும் நத்தார் பரிசில் வழங்கி கௌரவித்ததார்.

இதே போல்ஆன்மீகப் பெரியோர்களின் வாழ்த்துச் செய்திகளும் இவ்விழாவில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது அந்த வகையில்

இயேசுவின் பிறப்பு ஒரு மீட்பின் அடையாளம் என்பதை அருட் பணியாளர் ஏ. உதயகுமார் அவர்கள் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

மற்றும் அருட்சகோதரி மரியா தமது வாழ்த்துச் செய்தியில் ரட்சகரின் வருகை உலகத்திற்கு அன்பை விதைப்பதாக அமையும் என தனது உரையில் மிகச் சிறப்பாகப் பதிவு செய்தார்.

   இதேபோல் பங்குத் தந்தை அருட்திரு திலீப் அடிகளார் தமது வாழ்த்துச் செய்தியில் பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு குறித்தும்இ இயேசுவின் பிறப்பால் உலகம் அடைந்த விமோசனம் குறித்தும் மென்மையாக விளக்கினார். மற்றும் இயேசுவின் போதனைகள் இன்றைய நவீன உலகிற்கு எவ்வாறு பொருத்தமானவை என்பதையும்இ சக மனிதனை நேசிப்பதே உண்மையான வழிபாடு என்பதையும் வலியுறுத்தினார்.

மேற்படி ஆன்மீகவாதிகளின் ஆசியுரைகள்இ இவ்விழாவிற்கு ஒரு முழுமையான ஆன்மீகப் பரிமாணத்தைத் தேடித்தந்தன.

 இந்த ஒளிவிழாவானது கல்வித்துறையின் முக்கிய ஆளுமைகளின் முன்னிலையில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது.

  சோ. சுரநுதன் (பிரதி கல்விப் பணிப்பாளர்)

 அம் சித் கான் (பிரதி கல்விப் பணிப்பாளர்)

  நாசிர் (பிரதி கல்விப் பணிப்பாளர்) மற்றும்

கல்வி வலயத்தின்  உயர்மட்ட அதிகாரிகள்இ ஒருமித்து இக்கொண்டாட்டத்தில் பங்கேற்றதுஇ மதங்களைக் கடந்த மனிதாபிமானத்திற்கும்இ பன்முகத்தன்மை கொண்ட சமூக அமைப்பிற்கும் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்தது.

 இயேசுவின் பிறப்பு என்பது ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒரு நற்செய்தியாக அமைந்தது. அதேபோல், இக்கல்வி வலய ஒளிவிழாவும் மாணவர்களிடையே சகோதரத்துவத்தையும், ஆசிரியர்களிடையே ஒத்துழைப்பையும் பலப்படுத்தும் நோக்கில் அமைந்திருந்தது.

இயேசுவின் பிறப்பிலிருந்து நாம் கற்கும் பாடங்களாக

   எளிமை: அரண்மனைகளைத் தவிர்த்து மாட்டுத் தொழுவத்தைத் தேர்ந்தெடுத்தது எளிமையின் உச்சம்.

   அன்பு: உன்னை நீ நேசிப்பது போல உன் அயலானையும் நேசி என்ற தத்துவம்.

  மன்னிப்பு: சிலுவையில் அறையப்பட்டபோதும் 'தாம் செய்வது என்னவென்று அறியாத இவர்களை மன்னியும்' என்ற பெருந்தன்மை.

போன்ற யேசுபாலன் பிறப்பின் தத்துவம் இவ் விழாவில் கலந்து கொண்டவர்களது மனங்களைத் நெகிழ்த்தது.

 திருக்கோவில் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. இரா. உதயகுமார் சேர் அவர்களின் வழிகாட்டலில், பிரதிக் கல்வி ப்பணிப்பாளர்கள்இ உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிய ஆலோசகர்கள், மற்றும் வலயத்தின் கல்வி சார், கல்வி சாரா ஊழியர் கள் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த ஒளிவிழா, ஒரு சிறந்த ஆன்மீகப் பயணமாக நிறைவுற்றது.

கலந்துகொண்ட பிரதிப் பணிப்பாளர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் என அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஒளியேற்றிய இந்த நிகழ்வு, எமது சமூகத்தில் அறியாமை என்ற இருள் நீங்கி, கல்வி மற்றும் அன்பு என்ற பேரொளி நிலைத்திருக்க வழிசமைக்கும் என்பதில் ஐயமில்லை. இயேசு பாலன் பிறந்த இப்புனித நன்னாளில்இ அவர் போதித்த சமாதானம் எங்கும் நிலைத்திருக்கட்டும்.

 இறுதியாக இந்நிகழ்வில் பங்கேற்று பணியாற்றிப் பரவசமடைந்த அனைவருக்கும் நன்றி கூறிய இவ்வலயத்தின் முன் பிள்ளைக் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு சு.விவேகானந்தராஜா சேர் அவர்கள் இந்நிகழ்வை நிறைவு செய்தமை அனைவர் மனதிலும் அன்பு பெருகச் செய்தது. இந்நிகழ்வின் பெருமைகளை பறை சாற்வதாக அமைந்திருந்தது.











Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours