சா.நடனசபேசன்

நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலய அதிபர் மாடசாமி தர்மலிங்கம் அவர்கள் 34 வருட கல்விச்சேவையில் இருந்து 18 ஆம் திகதி ஓய்வுபெற்றுள்ளார் இவரது சேவையினைப்பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான அறபாத் முகைத்தீன், எச் நைறோஸ்கான் , பி.பரமதயாளன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்

நாவிதன்வெளிப் பிரதேசசெயலகப்பிரிவுக்குட்பட்ட 15 ஆம் கிராமத்தில் மாடசாமி வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் புதல்வாரன இவர் தனது ஆரம்பக்கல்வியினை 15 ஆம் கிராமம் விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் கற்று பின்னர்  தம்பலவத்தை கனிஸ்டவித்தியாலயம் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை ஆகியவற்றில்  கற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டத்தினையும் பூர்த்திசெய்துள்ளதுடன் அப்பிரதேசத்தில் முதல் பட்டதாரியும் இவரே ஆவார். 

இவர் 1992.05.15 திகதி ஆசிரியராக முதல் நியமனம் பெற்று நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் தனது கடமையினைப் பொறுப்பேற்று 20 வருடங்கள் ஆசிரியராக கடமையாற்றியதுடன் அப்பிரதேசத்தில் பல பட்டதாரிகளை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

 அதன்பின் 2012 இல் நடைபெற்ற அதிபர் சேவைப் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து அதிபர் தரம் 2 நியமனம்பெற்று சது சரஸ்வதிவித்தியாலயம் சது விநாயகர்வித்தியாலயம் அன்னமலை சிறிசக்தி வித்தியாலயம் சது விவேகானந்தாவித்தியாலயம்  இறுதியாக நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார் இவர் தரம் 1 அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கது










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours