இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்
அம்பாறை
மாவட்டத்தில் அமைந்துள்ள காரைதீவு சுவாமி விபுலானந்தர் பயிற்சி
நிலையத்தில், இளைஞர்களின் ஆளுமை மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப திறன்களை
வளர்க்கும் நோக்கில் “அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறி – 2026” என்ற சிறப்பு
பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
யோகாசனம், பரதநாட்டியம், பண்ணிசை, மிருதங்கம், வயலின், கதாப்பிரசங்கம் ஆகிய பயிற்சி நெறிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
குறித்த பயிற்சி நெறிகள் 2026 மே 25ஆம் தேதி (சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளன.
ஒவ்வொரு பயிற்சி நெறியும் தலா 120 மணித்தியாலங்களை கொண்ட 6 மாத காலத்திற்கு நடைபெறும்.
வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக
தகவல்களுக்கு 0779636634 மற்றும் 077 656 9156 ஆகிய தொலைபேசி இலக்கங்கள்
மூலம் தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
கற்கைநெறி, ஆன்மிக முன்னேற்றத்திற்கும் மன ஒருமைப்பாட்டிற்கும்
ஆதரவாகவும், அதேசமயம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்கவும்,
வழிகாட்டும் திறன்களை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நெறியின்
மூலம் இளைஞர்கள் தங்களின் திறமைகளை கண்டறிந்து சமூகத்திற்கு பயனுள்ள
நபர்களாக உருவாகும் வாய்ப்பு கிடைக்கும் என ஏற்பாட்டாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
இக்கற்கைநெறியின்
கீழ் யோகாசனம், பரதநாட்டியம், பண்ணிசை, மிருதங்கம், வயலின் மற்றும்
கதாப்பிரசங்கம் போன்ற பல்வேறு கலை மற்றும் ஆன்மிகப் பயிற்சிகள்
வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு பயிற்சியும் அனுபவமிக்க பயிற்றுவிப்பாளர்களால் நடைமுறை ரீதியில் கற்பிக்கப்படும்.
இந்த முயற்சி, இளைஞர்களின் முழுமையான வளர்ச்சிக்கான முக்கியமான படியாகக் கருதப்படுகின்றது.

Post A Comment:
0 comments so far,add yours