​மட்டக்களப்பு, திருப்பழுகாமம் "சூட்டிங் ஸ்டார்" விளையாட்டுக் கழகம் (SSSC) பெருமையுடன் நடாத்தும் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழாவின் இரண்டாவது நிகழ்வான மாபெரும் சைக்கிளோட்டப் போட்டி இன்று (19.04.2026)காலை மிக விமரிசையாக ஆரம்பமானது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியளவில், திருப்பழுகாமம் மணிக்கூட்டுக் கோபுரச் சந்தியில் போட்டி உத்தியோகபூர்வமாக கொடியசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரதேச இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதையும், சித்திரை புத்தாண்டை விளையாட்டுடன் கொண்டாடுவதையும் நோக்காகக் கொண்டு இந்த பிரம்மாண்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று முக்கிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த சைக்கிள் ஓட்ட வீரர்கள் மதுகின்றனர்.

போரதீவுப்பற்று (வெல்லாவெளி)மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை)

​மண்முனை தென் எருவில்பற்று (களுவாஞ்சிக்குடி)சவால்கள் நிறைந்த நீண்ட பாதைதிருப்பழுகாமத்தில் ஆரம்பித்த இப்போட்டியானது நீண்ட தூர இலக்கைக் கொண்டது. 

வீரர்கள் பின்வரும் பாதையினூடாக பயணிக்கின்றனர்.

திருப்பழுகாமம், பெரியபோரதீவு, பட்டிருப்புப் பாலம் , மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதி, குருக்கள்மடம் சந்தி (திரும்புமிடம்) , களுவாஞ்சிகுடி, கோவில்போரதீவு, வெல்லாவெளி, தும்பங்கேணி ,திக்கோடை ஊடாக மீண்டு வந்து பழுகாமம் கண்ணன் சிலையடியில் நிறைவு பெற்றன.

வீரர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளை உறுதிப்படுத்தும் வகையில், களுவாஞ்சிகுடி பொலிஸார் விசேட வீதிப் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூர் வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரும் இந்த உற்சாகமான நிகழ்வில் வெற்றி பெறுபவர்களுக்கு எதிர்வரும்(25.04.2026)ஆம் திகதி இறுதி விளையாட்டு நிறைவின் போது  பெறுமதியான பரிசில்களும் கௌரவங்களும் வழங்கப்படும்.

இப்போட்டியானது இப்பிரதேச விளையாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.








(ரஞ்சன்)

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours