க.விஜயரெத்தினம்
மட்டக்களப்பில் நான்கு(4) கால்களுடன் அவதரித்த அதிசயக் கோழிக்குஞ்சு.
இயற்கையின்
படைப்பில் எப்போதுமே சில ஆச்சரியங்கள் ஒளிந்திருக்கும்.அப்படி ஒரு
வியக்கத்தக்க சம்பவம் தற்போது மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேசத்தில்
இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
மீராவோடை
எல்லை வீதியைச் சேர்ந்த முகம்மட் நஸீர் என்பவர், கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி
தனது வீட்டில் 11 முட்டைகளை அடைகாக்க வைத்துள்ளார்.நேற்று (21)
செவ்வாய்க்கிழமை முட்டைகள் பொரித்தபோதுதான் அந்த ஆச்சரியம்
காத்திருந்தது.அதாவாது நான்கு கால்களுடன் ஒரு குட்டிக்கோழி
பொரித்த 9 குஞ்சுகளில், ஒரு குஞ்சு மட்டும் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது.இக்கோழிக்குஞ்சானது கறுப்பு மற்றும் மஞ்சள் நிறம் கலந்த அந்த அழகிய கோழிக்குஞ்சு நான்கு கால்களுடன் பிறந்துள்ளது.இக்கோழிக்குஞ்சுக் கு கூடுதல் கால்கள் இருந்தாலும், இந்த குட்டி கோழிக்குஞ்சு மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் காணப்படுகிறது.
இந்த
அதிசயத்தைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் நஸீரின்
வீட்டில் திரண்டு ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.அறிவியல் ரீதியாக
இது 'பாலிமீலியா' (Polymelia) என்று அழைக்கப்பட்டாலும், அந்தப் பகுதி
மக்கள் இதனை ஒரு வியக்கத்தக்க அபூர்வமாகவே பார்வையிட்டு வருகின்றார்கள்.

Post A Comment:
0 comments so far,add yours