(வி.ரி. சகாதேவராஜா)
முருகனாலயத்தின்
பாலஸ்தாபன குடமுழுக்கு விழா உகந்தமலைமுருகனாலய பிரதமகுரு சிவஸ்ரீ
க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
இறுதியாக இவ் ஆலயத்தில் 2014 இல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
எனவே
ஆகம விதிப்படி 12 வருடங்களின் பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்ற
விதி முறைகளுக்கமைய கடந்த 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.45
முதல் 12.00 வரையுள்ள சுப முகூர்த்த வேளையில் பாலஸ்தாபன குடமுழுக்கு
பெருவிழா நடைபெற்றது.
அதன்
காரணமாக, இவ் வருட வருடாந்த ஆடிவேல்விழா நடைபெறமாட்டாது. அதாவது
உற்சவத்தின் கொடியேற்றத்திருவிழா,15 நாள் திருவிழாக்கள் மற்றும்
தீர்த்தோற்சவம் என்பன இம்முறை நடைபெறமாட்டாது என்று ஆலய வண்ணக்கர் எம்டி.
சுதுநிலமே
திசாநாயக்க(சுதா) தெரிவித்தார்.
எனினும்,
கதிர்காமத்தோடு ஒத்த ஆடிவேல் விழா உற்சவ காலத்தில்(15-29) பாலஸ்தாபனம்
செய்த கூடத்தில் சாதாரண பூஜைகள் இடம்பெறும் எனவும் அவர் மேலும்
தெரிவித்தார்.
மேலும் வழமையான கதிர்காம கானக பாத யாத்திரை வழமைபோல் நடைபெறும் என்று வண்ணக்கர் சுதா மேலும் தெரிவித்தார்.





Post A Comment:
0 comments so far,add yours