எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு



மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெறும் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (27) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின் பணியாளர் நாயகம் அசேல குணவர்த்தன கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல மாவட்டங்களில் சுகாதாரத் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதுடன், கடந்த எட்டு ஆண்டுகளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகச் சேவையாற்றி வைத்தியசாலையின் நிர்வாக மற்றும் சுகாதார சேவைகளின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

அவரது நீண்டகால சேவையைப் பாராட்டி வைத்தியசாலையின் அதிகாரிகள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்களினால் வாழ்த்துரைகள் இடம்பெற்றன.
இதன் போது பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது கடந்த  வருடங்களில் பணிப்பாளரினால் முன்னேடுக்கப்பட்ட  அபிவிருத்திகள் வேலைத்திட்டம் தொடர்பான ஆவணப்புத்தகம் வழங்கப்பட்டன.

மேலும் அவரது சேவையை நினைவுகூரும் வகையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலரும் பாராட்டு உரைகளை நிகழ்த்தி, அவரின் அர்ப்பணிப்பான பணிக்காக நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  ஆர்.முரளீஸ்வரன், கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜி. சுகுணன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்களான திருமதி மைத்திலி பாத்லட் உள்ளிட்ட வைத்திய நிபுணர்கள், துறைசார் நிபுணர்கள், அதிகாரிகள், சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours