மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சின்னவத்தை வட்டாரக் கிராமகளுக்கு தெரு மின்விளக்குகள் பொருத்தும் பணியினை சின்னவத்தை வட்டார பிரதேசசபை உறுப்பினர் காத்தமுத்து யோகராசா அவர்களது தனிப்பட்ட முயற்சியினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஆரம்ப நிகழ்வு செவ்வாய்க்கிழமை 4ஆம் திகதி போரதீவுப்பற்றுபிரதேசசபை செயலாளர்  ச.விஜிதராஜா அவர்களது முன்னிலையில் இடம்பெற்றது.

பிரதேச சபைத் தவிசாளர் வி.மதிமேனன் அவர்களது வழிகாட்டலில் இவ்வேலைத்திட்டம் ஆரப்பிக்கப்பட்டது. இதற்கான உதவியினை பிரதேசசபை உறுப்பினர் கா.யோகராசா அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் உறவுகளிடம் முன்வைத்ததன் பயனாக இவ் உதவி வழங்கப்பட்டுள்ளது.  

போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட மட்டக்களப்பு - அம்பாறை எல்லைக் கிராமங்களான மாலையர்கட்டு பூச்சுக்கூடு, ராணமடு சங்கர்புரம் சின்னவத்தை ஆகிய கிராமங்களில் வாழும் மக்கள் நீண்டகாலமாக காட்டுயானைகளின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ் தெருமின்விளக்குகளை வழங்கியிருப்பது பொருத்தமானதாக இருப்பதுடன் இவ் உதவியினை வழங்கியவர்களுக்குப் பிரதேசசபை உறுப்பினர் கா.யோகராசா நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours