(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

நீதிச் சேவை ஆணைக்குழுவினால் செப்டம்பர் 01 ஆம் திகதி புதிதாக நியமிக்கப்பட்ட சாய்ந்தமருது புதிய காதிநீதிபதியான  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைமைக் காரியாலயத்தில் உதவிபொது முகாமையாளராகக் கடமையாற்றிய பொறியியலாளரும் சட்டமாணியும் சட்ட முதுமாணியுமான அல்ஹாஜ் யூ.கே.எம். முஸாஜித் அவர்களை வரவேற்கும் நிகழ்வும் முன்னாள் காதி நீதிபதியான முன்னாள் கூட்டுறவு அபிவிருத்தி உதவி  உத்தியோகத்தர் (எண்பார்வை) ஏ.எல். ஆதம்பாவா (BA, MA, MPhil) அவர்களுக்கான பிரியாவிடை வைபவமும்  மனித வலு மேம்பாட்டு மன்றத்தின் (Manpower Enhancement Forum) பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) தேசமான்ய கலாநிதி ஓய்வு நிலை அதிபர் ஐ. ஹஸன் அலி (நவாஸ்) அவர்களின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது சீ ப்ரீஸ் ரெஸ்டோரன்டில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் அவர்கள் கலந்து கொண்டதோடு,   முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளரும் கல்விமானுமாகிய ஏ. பீர்முஹம்மது, மாளிகைக்காடு நூரா பின்த் சாலிஹ் பள்ளிவாசலின் பேஷ்இமாம் மௌலவி  எம்.ஐ. ஆதம்பாவா (றஷாதி), அதிபரும் கல்வி முதுமாணியும் சட்டமாணியுமான ரீ.எம்.றிபாய் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.ஏ. அஸீஸ், சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ உதவியாளர் ஏ.சி. முஹம்மட், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம், காரைதீவு பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. இஸ்ஸதீன், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சாகீர் ஹுஸைன், ஓய்வுபெற்ற ஆசிரியர் மருதூர் ஹஸன், தபாலக உத்தியோகத்தர் எம்.முபாறக், ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் எம்.ஐ.எம். நஜீம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மேற்பார்வை அதிகாரி எம்.எஸ்.எம். சபான் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்டதோடு, முன்னாள் காதிநீதிபதியுடன் மதிப்பீட்டாளர்களாகவும் தற்போது முஸ்லிம் விவாகப் பதிவாளர்களாவும் கடமையாற்றும் அல்ஹாஜ் எம்.ஐ. உதுமாலெப்பை (எவஸைன்), அல்ஹாஜ் எம்.எஸ்.றௌசூக், ஓய்வுபெற்ற நீர்ப்பாசன உத்தியோகத்தர் ஏ.எம். றசீட், எம்.வை.பைஸர், யூ.எல்.முனவ்வர், தொழிலதிபர் இக்ராஹ் ஜலால், ரீ.கே. ஹஸன், ஏ.கே. நௌஸாட், சீசீரீவி தொழில்நுட்பவியலாளர் என்.எம். சியாம் ஆகியோர்  பிரமுகர்களாகவும் கலந்து கொண்டனர்.

அதிபரும் கல்வி முதுமாணியும் சட்டமாணியுமான ரீ.எம்.றிபாய் நிகழ்வை சிறப்பாக ஒழுங்கமைத்து வழிநடாத்தினார்.

இதன்போது சாய்ந்தமருதில் கடந்த 03 1/2 வருடங்களுக்கு மேலாக காதி நீதிபதியாகப் பணியாற்றி பிரியாவிடை பெறும் ஏ.எல். ஆதம்பாவா மனித வலு மேம்பாட்டு மன்றத்தினால் அவரது சேவையைப் பாராட்டி,, பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் உட்பட அதிதிகளால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இவர், சாய்ந்தமருதில்  03 1/2 வருடங்கள் காதிநீதிபதியாகவும் சம்மாந்துறை பதில் காதிநீதிபதியாக ஒரு வருடமும் 03 மாதங்களும் பணியாற்றி 60 க்கு மேற்பட்ட வழக்குகளை சமரசம் செய்து வைத்துள்ளார்.

இவ்வாறு புதிய காதி நீதிபதியை வரவேற்று  பிரியாவிடை பெறும் காதி நீதிபதியை கௌரவிக்கும் இந்நிகழ்வு சாய்ந்தமருதில் இடம்பெற்றது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.











Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours