(கனகராஜா .சரவணன்)



வடக்கு கிழக்கில் வறட்சி என்றாலும் மழைவெள்ளம் என்றாலும் மீனவர்களும் விவசாயிகளும் தான்  பாதிக்கப்படுகின்றனர் இதற்கு பிரதான காரணம் இங்குள்ள  குளங்கள் புனரமைக்கப்படாதது எனவே முதலில் வடக்கு கிழக்கில் உள்ள குளங்களை புனரமைக்குமாறு  என ஈ.பி.டி.பி கட்சி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் ஜனாதிபதியிடம் விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு ஈ.பி.டி.பி கட்சி வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (13) பாலமீன்மடு விலுள்ள காரியாலயத்தில்  இடம்பெற்றது இதன்போது கட்சி மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜா, ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கலந்து கொண்டு இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.

வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக குளங்கள் புனரமைக்கபடாதனால் வறட்சி என்றாலும் மழைவெள்ளம் என்றாலும் மீனவர்களும் விவசாயிகளும் தான்  பாதிக்கப்படுகின்றனர் எனவே இந்த குளங்களை தூர்வாரி அகலப்படுத்தி ஆழப்படுத்தி சரியான நீர் முகாமைத்துவம் செய்தால் வறட்சி என்றாலும் மழை வெள்ளம் என்றாலும் விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள்.

அவ்வாறே மீனவர்களின்; வாழ்வாதாரம் பொதுமக்களுடைய  சொத்துக்களுக்கும் பாதுகாக்கப்படும்.  எனவே நாட்டு ஜனாதிபதியிடம் விசேட வேண்டுகோள் விடுக்கின்றோம் அத்தியாவசிய தேவைகள் உள்ள இடங்களில் மட்டும் அபிவிருத்தியை பணிகளை மேற்கொண்டு இரண்டு ஆண்டுகள் இந்த பணத்தை மீதப்படுத்தி வடக்கு கிழக்கில் உள்;ள குளங்களை புனரமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

உதாரணமாக எங்களுக்கு ஒரு வாகனம் இருக்கிறது அதன் முன் ரயருக்கு காற்று போய்விட்டது காற்று அடிப்பதற்;கு 10 ரூபா ஓட்டை ஒட்டுவதற்கு 100 ரூபா எனவே 100 ரூபா தேவைப்படுகிறது அந்த வாகனத்திற்கு காற்று அடித்தால் ஒரு நாள் முழுக்க ஓடமுடியும் என்பதற்காக என அந்த வாகனத்தை ஓடிக் கொண்டிருக்கின்றோம்.

அவ்வாறுதான் வடக்கு கிழக்கில் குளங்களை புனரமைக்காமல் விட்டால் மழை வெள்ள காலத்தில் வீதிகள் பாலங்கள் உடைக்கப்படும் அதன் பின்னர் நீங்கள் வீதிகள் பாலங்களை புனரமைப்பீர்கள் பின்னர் அடுத்து மாரி கால மழை வெள்ளத்தில் மீண்டும் பாலம் வீதிகள் உடைக்கப்படும் பொதுமக்களின் சொத்துக்கள் பாதிக்கப்படும் இதற்கு இழப்பீடு  கொடுக்க வேண்டிவரும்.

எனவே ஜனாதிபதியின் ஆலோசகர்கள். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் அதன் உறுப்பினர்கள் இதை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த குளங்களை புனரமைக்க வெகு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை தவறும் பட்சத்தில் தொடர்ச்சியாக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படும் என தெளிவாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபிவிருத்தி என்று சொன்னால் மக்கள் நடமாட்டமற்ற பகுதிகளில் கட்டிடங்களை அமைப்பது விளையாட்டு மைதானங்களை புனரமைப்பது கோயில்களுக்கு நிதி ஒதுக்குவது இதை தவிர வேறு ஒன்றும் தெரியாது.
 
பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஒரு தொழில் சாலைகளை அமைத்து ஒரு 10 அல்லது 20 இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்பை கொடுத்திருக்கலாம் அதைவிடுத்து அந்த பணங்களை வாக்குகளுக்காக மைதானங்கள் ஆலயங்களுக்கு செலவு செய்வார்கள்.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காலா காலமாக மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்ட மக்களின் பெரும் தொகை வரி பணமானது  வீண் விரயமாக்கப்பட்டுள்ளது

உதாரணமாக கடந்த காலத்தில் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட 400 மில்லியன் ரூபாவில் கோட்டை கல்லாற்றில் கூட்டுறவு கட்டிடம் புனரமைக்க என சுனாமி காலத்தில் பாதிக்கப்பட்டு யாருடையது என இதுவரை தெரியாத ஒரு பழைய கட்டிடத்துக்கு 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது.

இந்த கட்டிடத்துக்கு வர்ணம் பூசி மெழுகி  கதவும் இல்லை ஜன்னலும் இல்லாது இது  புனரமைப்பு பூர்த்தி  செய்யப்பட்டதா நிதியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக காட்டப்பட்டு இரண்டு வருடங்களாகியும் இதுவரை மக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்படாமல் பாழடைந்துள்ளது.

இவ்வாறு மக்களின் வரிப்பணத்தில் 50 இலட்சம் ரூபா செலவு செய்த இந்த கட்டிடம் கடந்த 6 மாதத்துக்கு முன்னர் வாடகைக்கு விடப்படும் என அங்கு ஒரு பதாதை தொங்கவிடப்பட்டிருந்தது. இது உண்மையில் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமானதா? இந்த காணி உறுதி யாருடைய பெயரில் உள்ளது என இவைகள் விசாரிக்க விசேட குழு ஒன்றை நியமித்து விசாரணை செய்ய வேண்டும்.

இவ்வாறு தான் இரா.சாணக்கியன்  கடந்த கால ஜனாதிபதி ரணில் வழங்கப்பட்டிருந்த 400 மில்லியன் நிறைய வேலைத்திட்டங்கள் பூர்தி செய்யப்படாமல் பூர்த்தி செய்ததாக நிதி பெறப்பட்டுள்ளது இது தொடர்பாக அப்போது களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளராக இருந்த பிரதேச செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவிடம் கோரிக்கையை முன்வைக்கின்றோம்  இந்த கைவிடப்பட்டுள்ள  கோட்டை கல்லாறு கூட்டுறவு கட்டிடத்தை கையகப்படுத்தி  மக்கள் தேவை கருதி பயன்பாட்டிற்காக பயன்படுத்த வேண்டும் என.
இந்த நிலையில் பருவபெயர்ச்சி மழை தொடங்கவுள்ளது இலங்கைக்கு 3 பாரிய தாழமுக்கம் ஏற்படும் எனவும் இதனால் பாரிய மழை வெள்ள அனர்த்தம் ஏற்படும் என வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே எல்லா இடங்களில் இருந்து வழிந்து ஓடிவரும் வெள்ள நீர்  இந்த பாலமீன்மடு திராய்மடு பகுதிக்கு வந்து கடைசியாக முகத்துவாரம் ஊடாகத்தான் கடலுக்குள் செல்லும்.

இவ்வாறான நிலையில் கடலுக்கு செல்லும் பிரதான வடிகான்களில் சாப்பையும் புல்லும் முளைத்து நீர் வழிந்தோட முடியாதவாறு வடிகான்கள் அடைத்து கிடக்கிறது எனவே இதில் மட்டு மாநகர சபை முதல்வர் கூடிய கவனம் செலுத்தி வடிகான்களை துப்பரவு செய்ய வேண்டும்
அவ்வாறு துப்புரவு செய்யாவிடின் வெள்ள நீர் வழிந்து கடலுக்கு செல்ல முடியாது மீனவர்கள் செறிந்து வாழும் பாலமீன்மடு திராய்மடு வெள்ளத்தில் மூழ்கும்  இதனால் பாதிக்கப்பட்டால் மட்டு மாநகர சபை முதல்வரே முழுப் பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours