(  வி.ரி.சகாதேவராஜா)

திருகோணமலை, கன்னியா காயத்திரி பீட ஆத்மயோக ஞானசபா   ஆலயத்தின் புனராவர்த்தன ஏககுண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்திப் பெருவிழா, இன்று (13)  ஞாயிற்றுக்கிழமை காலை 9.05 -10.30 மணிவரையான சுபமுகூர்த்த வேளையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நேற்று  12ஆம் திகதி சனிக்கிழமை எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இன்று மகா கும்பாபிஷேகம் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளின் ஆசீர்வாதத்துடன், சிறப்பாக இடம்பெற்றது.

நுவரெலியா காயத்ரி பீட இலங்காதீஸ்வரர் ஆலய பிரதம குரு  பிரம்மஸ்ரீ யோ.கோமகன் குருக்கள் முன்னிலையில் கும்பாபிஷேக பெருவிழா ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கும்பாபிஷேக பெருவிழாவைத் தொடர்ந்து, பன்னிரண்டு நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் இடம் பெறும்.
அன்னதானமும் இடம்பெறும்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours